SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

10/1/2022 2:40:27 AM

ஈரோடு, அக். 1: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு  5 ஆண்டு தடைவிதிப்பு எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில், காவிரி ரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சப்பாளியில் உள்ள பாஜ அலுவலகம், இந்து முன்னணி கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், ஜிஎச் ரவுண்டானா,

மேட்டூர் ரோடு, வீரப்பன் சத்திரம் கருங்கல்பாளையம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல வழிபாட்டு தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்