மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
10/1/2022 2:40:06 AM
ஈரோடு, செப்.30: மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சீர்வரிசையை வழங்கினார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்திற்கு உட்பட்ட குழந்தைகள் மையத்தில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று காலை மொடக்குறிச்சியில் உள்ள வடிவுள்ள மங்கை திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்புரையாற்றி துவங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அறம் அறக்கட்டளை நிறுவன தலைவர் கிருத்திகா ஷிவ்குமார் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசளித்தார்.
அறம் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஏற்பாட்டில் ஸ்மார்ட் கிட்ஸ் நிறுவனர் ஜெயந்தி, கர்ப்பகால உணவுமுறை மற்றும் உடல் பராமரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் கணபதி, மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்லம்மாள் சரவணன், பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகேயன், அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவர் கவிதா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் இவ்விழாவில் அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். நிலை-2 மேற்பார்வையாளர் நிலை-2 நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
கார் மோதி இன்ஜினியர் பலி
வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஈரோட்டில் நியோ ஐடி பார்க் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு
அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா
சிப்காட் வளாகத்திற்கு ரயில்வே தண்டவாளம்
பாசனத்துக்கு வாய்க்காலில் பாய்ந்தேடும் தண்ணீர் கழிவு நீர் செல்லும் காவிரி எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி