ஒன்றிய குழு கூட்டம்
10/1/2022 2:34:44 AM
சிங்கம்புணரி அக். 1: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பேசும்போது எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக குடிநீர் இணைப்புகள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் சியாமுத்துப்பட்டியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அவற்றை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் கலைச்செல்வி பேசும்போது மேலப்பட்டி பகுதியில் சுகாதார பணிகளை வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும், பேசினார் இதில் துணைத் தலைவர் சரண்யா கவுன்சிலர்கள், ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, பெரிய கருப்பி, இளங்குமார், சசிக்குமார், மேலாளர் ஜெய அலுவலக பணியாளர்கள் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காளையார்கோவில் அருகே பரவசம் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு
ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கம் பேரூராட்சி கூட்டத்தில் திமுக, காங். வெளிநடப்பு
விவசாயம் செழிக்க வேண்டி சவுபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சிவகங்கை அருகே பெண் போலீஸ் கணவரை வெட்டி வழிப்பறி செய்த இருவர் கைது: ஆயுதங்கள், நகைகள் பறிமுதல்
சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டும் எம்எல்ஏக்களிடம் கோரிக்கை
சிவகங்கை அருகே வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி