இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
10/1/2022 2:31:49 AM
மதுரை, அக். 1: மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.10ம் தேதி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், அக்.13ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றுவந்த காலாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று(அக்.1) முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. 9 நாள் விடுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு, அக்.10ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு அக்.10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் உத்தரவுப்படி எண்ணும் எழுத்தும் 2ம்கட்ட பயிற்சி நடக்க உள்ளது. எனவே, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், அக்.13ம் தேதி திறக்கப்படும். அதே நேரத்தில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு முன்னர் அறிவித்தது போல், அக்.10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கண்ஸ்ட்ரக்டிவ்- 2023 கட்டுமான கண்காட்சி
கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர்கள் சேமிப்பு- பாதுகாப்பு திட்ட நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பாரா வீரர்கள் 29 பதக்கம் பெற்றனர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டிற்கு 5வது இடம்
மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி திறக்கிறார்
ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக இன்ஜின் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுபோதையில் காரை ஓட்டி டூவீலர்கள் மீது மோதிய 2 பேருக்கு அடி, உதை
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!