டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
10/1/2022 2:31:42 AM
மேலூர், அக். 1: மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் பாண்டி மகன் பொன்னையன்(47). இவருக்கு 2010ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் மனைவியுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டனர். இவர் தனியாக வீட்டின் முன்பு இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பொன்னையனின் மனைவியின் சகோதரி தனத்தின் மகன் நவீன், மற்றும் 2 பேர் இவரது கடைக்கு ஒரு காரில் வந்துள்ளனர்.
பின் மூவரும் சேர்ந்த பொன்னையனை சரமாரியாக கட்டை, கம்பால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர். பின் கடையில் இருந்த அனைத்து பொருட்களை அடித்து உடைத்து எறிந்து விட்டு சென்றுள்ளனர். பொன்னையன் படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்கி, பணம் பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
கார் புரோக்கரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது
மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி
அரசு மருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்ட செக்யூரிட்டி கைது
புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் கோ.தளபதி எம்எல்ஏ பேச்சு
அரசு பள்ளிக்குள் புகுந்து போதையில் ரகளை செய்த வாலிபர்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி