பெரியாறு பாசன வாய்காலில் இருந்து புதிய கால்வாய் வெட்ட வேண்டும்: நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
10/1/2022 2:30:28 AM
நிலக்கோட்டை, அக். 1: நிலக்கோட்டை யூனியனில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ரெஜினாநாயகம் தலைமை வகிக்க, பிடிஓக்கள் பஞ்சவர்ணம், அண்ணாத்துரை (கி.ஊ) முன்னிலை வகித்தனர், துணை தலைவர் யாகப்பன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு வரவு செலவினங்கள் மற்றும் மத்திய மாநில நிதிகளில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் நிலக்கோட்டை குழிப்பட்டி, குரும்பபட்டி வழியாக செல்லும் முல்லைப்பெரியாறு பாசன காவாயிலிருந்து பூசாரிபட்டி, குளத்துப்பட்டி வழியாக சுமார் 3 கிமீ தூரம் புதிய கால்வாய் வெட்டி சீத்தாபுரத்திலுள்ள குடகனாறு செங்கட்டாம்பட்டி ராஜவாய்க்காலுடன் இணைக்க வேண்டும் என்றும், இதன்மூலம் நூத்தலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, கோட்டூர், சிலுக்குவார்பட்டி,
குல்லலக்குண்டு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட ஊராகளிலுள்ள 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரப்பபட்டு 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 100க்கும் மேற்பட்ட கிராமக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் எனவும், இப்பகுதி கிராமங்களில் ஒன்றியம், பேரூராட்சி சார்பில் குடிநீர் தேவைக்காக போடப்படும் போர்வெல் செலவீன தொகையை இக்கால்வாய் பணிக்கு செலவிட்டால் தண்ணீர் பிரச்னைக்கு தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என விவாதித்து அணைத்து கவுன்சிலர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் லலிதா, ரூபி சகிலா, கவிதா, கணேசன்,ராஜதுரை, சுதந்திராதேவி, அறிவு(எ) சின்ன மாயன், தியாகு, நல்லதம்பி, ரேவதி, பாலமுருகன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர். யூனியன் மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
சாணார்பட்டி அருகே 31 அடி உயர மகா மாரியம்மன் சிலைக்கு புனித நீர் அபிஷேகம்
நத்தம் அருகே கோயில் திருவிழா தொடர்பாக பொதுமக்கள் திடீர் போராட்டம் போலீசார் சமரசத்தால் கலைந்தனர்
நிலக்கோட்டையில் புதிய கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவில் 600 கிளைகளாக திகழும் மண்டல மேலாளர் தகவல்
தேசிய பாரா பேட்மிண்டன் தமிழக அணி வீரர்கள் சாதனை 15 பதக்கங்கள் வென்றனர்
பழநி வையாபுரிக்குளத்தில் கழிவுநீரை கலக்கும் கட்டிடத்திற்கு ‘சீல்’: நகராட்சிக்கு ஆர்டிஓ பரிந்துரை
சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் பாஜ அரசு நிறுத்திவிட்டது திண்டுக்கல்லில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!