SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி

10/1/2022 2:28:45 AM

* கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
* 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பன்சிதர் குப்தா (45). தொழிலதிபரான இவர், பாரிமுனையில் வெளிநாடுகளில் இருந்து இனிப்புகளை மொத்தமாக இறக்குமதி செய்து, விற்பனை செய்கிறார். கடந்த 14ம் தேதி பன்சிதர் குப்தா கடைக்கு சென்று விட்டார். இவரது தயார் மஞ்சு மற்றும் வீட்டு செக்யூரிட்டி நேபாளத்தை சேர்ந்த ராஜன் (எ) திபேந்திரா ஆஜி (20) மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அன்று மாலை மஞ்சு குப்தாவும் வீட்டை பூட்டிவிட்டு பாரிமுனையில் உள்ள கடைக்கு சென்று விட்டார். பிறகு பன்சிதர் குப்தா வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ10 லட்சம் ரொக்கம், 10 தங்க காசுகள், 6 மோதிரம், 3 செயின் என ரூ5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது. காவலாளி ராஜனும் மாயமாகி இருந்தார்.

இதுகுறித்து தொழிலதிபர் பன்சிதர் குப்தா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாக காவலாளி ராஜனை தேடி வந்தனர். இதற்கிடையே செல்போன் சிக்னல் உதவியுடன் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் வீட்டில் காவலாளி ராஜன் உடன் மொத்தம் 8 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்காக காவலாளி ராஜன் தனது கூட்டாளிகளான நேபாளத்தை சேர்ந்த 7 பேருடன் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. அதில் 2 நேபாளிகள் சைதாப்பேட்டை பகுதியில் தங்கி பணியாற்றி வருவதும் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

அதைதொடர்ந்து சைதாப்பேட்டையில் பதுங்கி இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ராஜன் கூட்டாளிகளான கைலாஷ் (23), பாஜி டமாய் (27) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், காவலாளி ராஜன் எங்களை தொடர்பு கொண்டு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க உதவி செய்ய கோரினர். நாங்களும் எங்கள் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் கொள்ளையடிக்க உதவி செய்தோம். அதற்காக எங்களுக்கு தலா ரூ25 ஆயிரம் கூலியாக பணம் கொடுத்தார்.

ராஜன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளுடன் மறுநாளே நேபாள நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் கூலிக்கு தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம் என்று கைதான 2 நேபாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜன் உட்பட 6 பேரை கைது செய்ய தனிப்படை நேபாளம் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்