கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை: சிஎம்டிஏ அதிகாரி தகவல்
9/30/2022 7:05:48 AM
அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக சார்பில், சிறப்பு சந்தை அமைத்து தரப்படுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கவில்லை. இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்துள்ள நிலையில், ஆயுதபூஜைக்காக இன்று சிறப்பு சந்தை திறக்கப்படுகிறது. இதையொட்டி, பூஜைக்கு தேவையான பொரி, அவல், கடலை, சர்க்கரை, பழங்கள், வாழைமரங்கள், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்த சிறப்பு சந்தை இன்று முதல் அடுத்தமாதம் 9ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு சந்தை போடப்பட்டு எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதுபோல் ஆயுத பூஜை முன்னிட்டு சிறப்பு சந்தை நாளை தொடங்கியுள்ள நிலையில், வியாபாரிகள் அங்காடி குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கக்கூடாது’’ என்றார்.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு
சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!