SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

9/30/2022 7:03:04 AM

திருச்சி செப்.30: திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற் கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் ஆகியோ ர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் மேயர் அன்பழகன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், ஜெய நிர்மலா, துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசுகையில், ஜவஹர் (காங்கிரஸ்): ரங்கத்தில் பஸ் நிலையம் அமைய உள்ளது. அந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு ,மேயர் அன்பழகன் ஆகியோருக்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டிற்கு இடம் ஒதுக்கி இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய அமைச்சருக்கும், அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

பைஸ் அகமது (மமக) : எனது வார்டுக்கு உட்பட்ட தென்னூர்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போது காய்ச்சல் காலம் நிலவி வருவதால் பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நீக்க வேண்டும்.மதிவாணன்.(திமுக மண்டல குழு தலைவர்):திருவெறும்பூர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் பன்றி காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும் அபாயம் உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சுளா தேவி (திமுக):கருமண்டபம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதேபோன்று சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளன. அதனை நிறைவேற்ற வேண்டும்.

சுஜாதா (காங்கிரஸ்): ஓயாமரி சுடுகாடு கொட்டகை மழையால் தண்ணீர் கொட்டுகிறது. ஈம காரியங்கள் செய்வதற்கு உள்ள அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனை உடனடியாக பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் (திமுக): நீங்கள் 65 வார்டுகளுக்கும் தானே தந்தை. அப்படி என்றால் 65 வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து வழங்குவது தானே நியாயம் என்றார். (அரசவையில் புலவர் போல் பேசினார்) இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அப்போது, மேயர் அன்பழகன் குறுக்கிட்டு, மாநகராட்சி நிதியை பிரித்து கேட்கிறீர்களா? அல்லது என் சொத்தை பிரித்து கேட்கிறீர்களா என்றார். (சிரிப்பலை) காஜாமலை விஜய் (திமுக): நமக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்க முடியாது. ஒவ்வொருவராக தான் நடத்த வேண்டும்.

கமால் முஸ்தபா(திமுக):உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆயகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேயர் அன்பழகன்: 2 நாட்களில் ஆகாய தாமரையை அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் 232 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி  பேசும் போது,மின் கட்டண உயர்வை கண்டித்து  அரசுக்கு எதிராக தீர்மான ம் நிறைவேற்ற  வேண்டும் என்றார்.
 அப்போது திமுக கவுன்சிலர்கள் மாமன்றத்தில்  மின்சார கட்டண உயர்வை கண்டித்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.  அதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள்   வெளிநடப்பு செய்தனர். உலக இருதய தினத்தையொட்டி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்