இதய வடிவிலான பலூன்கள் பறக்கவிட்டு விழிப்புணர்வு
9/30/2022 7:02:56 AM
திருச்சி,செப்.30: உலக இருதய தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதய வடிவிலான பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் உலக இருதய தின தலைப்பான உங்கள் இதயத்தை காத்து மற்றவர்கள் இதயத்தை மீட்ெடடுங்கள் என்ற தலைப்பின் கீழ் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் நேரு, கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ், இருதய அறுவைசிகிச்சை நிபுணர் ஜெய்சங்கர், உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இருதயத்தை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற நாடகமும் நடைபெற்றது.
காலிமனைகளில் மழைநீர் தேங்கினால் உரிமையாளர்களுக்கு அபராதம்
கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பேசியது:தமிழக அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. ரங்கத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் ரங்கம் கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து, சுமார் 8 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு தரவேண்டியுள்ளது. விரைவில் அந்த நிலம் தரப்படவுள்ளது. அதில், கோயிலுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் அமைக்கவும், மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும். மாநகராட்சியில் மேலும் புதிய சாலைகள் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காலி மனைகளில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக தெரியவருகிறது. எனவே, அவற்றை ஒரு வார காலத்துக்குள் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தூய்மை படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!