தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது
9/30/2022 6:58:47 AM
காரைக்கால், செப்.30: காரைக்காலில் தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் முடங்கியது. காரைக்காலில் மின்துறை தனியார் மையம் ஆவதை எதிர்த்தும் மின்துறை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதை திரும்ப பெறக் கோரியும் மின்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக காலவரையின்றி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காரைக்காலில் கிராம பகுதிகள் மற்றும் காரைக்கால் நகரப்பகுதி ஒரு சில இடங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர் மின்வெட்டு நிலை வருகிறது. இதனிடையே காரைக்கால் மதகடி யில் உள்ள மத்திய சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கடந்த 36 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் காரைக்காலில் மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர்கள் வைத்து இயக்கினாலும் 8 மணி நேரம் மட்டுமே பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேராக பி.எஸ்.என்.ல் அலுவலகம் வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
வைத்தீஸ்வரன்கோயிலில் கார்த்திகை வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம்
வேதாரண்யத்தில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்
90 பேருக்கு வழங்கல் விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்
ஒன்றியக்குழு தலைவர் தகவல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மனிதசங்கிலி ஜாக்டோ- ஜியோ போராட்டம்
நாகப்பட்டினம் / மயிலாடுதுறை இடைநிலை ஆசிரியருக்கு பாராட்டு நாகப்பட்டினம் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!