SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

(தி.மலை-இ2-4) சாராயம் கடத்தி சென்ற பைக் மோதி தொழிலாளி படுகாயம் போலீஸ் விசாரணை கண்ணமங்கலம் அருகே

9/30/2022 6:54:53 AM

ஆரணி, செப்.30: கண்ணமங்கலம் அடுத்த அத்திமலைபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(27) முடிதிருத்தும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இவரவு வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக அவது பைக்கில் கண்ணமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, வண்ணங்குளம் சுடுகாட்டுப் பகுதி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக் பாண்டியன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பாண்டியன் படுகாயம் அடைந்தார். எதிர் மற்றொரு பைக்கில் வந்த வந்த வாலிபர் லேசான காயங்களுடன் தப்பினர். அப்போது, பைக் மோதிக் கொண்ட சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் பாண்டியனை மீட்டனர். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் திடீரென தப்பியாடினர். மேலும், வாலிபர் அந்த பைக்கில் லாரி டியூபில் கள்ளச்சாராயம் கடந்தி வந்தது தெரியவந்தது. உடனே, பொதுமக்கள் இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் அமிர்தி வனப்பகுதியில் இருந்து சாராயம் கடத்தி அதனை, கண்ணமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாராய வியாபரிகளிடம் விற்பதற்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அமிர்தி வனப்பகுதியில் இருந்து தினமும் இரவு முதல் அதிகாலை வரை விடிய பைக்குகளில் கள்ளச்சாராயத்தை லாரி டியூப்களில் லிட்டர் கணக்கில் அடைத்து, சர்வ சாதாரணமாக வெளிப்படையாக கடத்தி வருகின்றனர். சாரhய கடத்தலில் அதிகளவில் திருட்டு பைக்குகளை பயன்படுத்துகின்றனர். அந்த பைக்குளில் பதிவின் கூட இருப்பதில்லை.
இதனால், சாராயம் கடத்தி செல்லும் நபர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பைக்குகள் அதிவேகமாக ஓட்டிசெல்வதால், எதிர்வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது மோதி விட்டு செல்வதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், இதுபோன்ற தொடர் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

அதேபோல், அமிர்தி பகுதியில் இருந்து கடத்தி வரும் சாராயத்தை 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பிரித்து கொடுக்கின்றனர். அதன்பிறகு, வியாபாரிகள் கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மலைபகுதிகள், முள்புதர்களில் அமர்ந்து பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து மூட்டைகளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால், கண்ணமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாள்தோளும் இரவு, பகலாக கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைப்பெற்று வருகிறது. கள்ளச்சாராயம் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் இளைஞர்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுட்டு வருகின்றனர். எனவே, கண்ணமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து சென்று, சாராய கடத்தலை கடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்