SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காட்டில் ஜென்ட்ஸ் டெர்மினல் கடை திறப்பு விழா

9/30/2022 6:54:04 AM

நெல்லை, செப். 30:  நெல்லை அருகே களக்காட்டில் ‘ஜென்ட்ஸ் டெர்மினல்’ என்னும் புதிய ஆண்கள் ஆடையகத்தை சபாநாயகர் அப்பாவு திறந்துவைத்தார். திறப்பு விழாவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம், களக்காட்டில் ‘ஜென்ட்ஸ் டெர்மினல்’ என்ற பெயரில் ஆடவருக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆடையகத்தின் திறப்பு விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. கடை உரிமையாளர் ரிஸ்வான்  வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, புதிய கடையை திறந்துவைத்தார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, முதல் விற்பனையை துவக்கிவைத்தார்.
 விழாவில் மமக மாநில துணைத்தலைவர் பி‌.எஸ். ஹமீது, மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன், மாவட்டச் செயலாளர் ஜாவித், தமுமுக மாவட்டச் செயலாளர் கோல்டன் காஜா,

மாவட்ட பொருளாளர் ‌தேயிலை மைதீன், களக்காடு வர்த்தக சங்கத்தலைவர் ராஜன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் மோகன் குமாரராஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். களக்காடு நகர மமக தலைவர் தெளசிப் நன்றி கூறினார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலெக்‌ஷன்களை கொண்ட இந்த புதிய கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முதல் 3 தினங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ.5 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினால் ரூ.4 ஆயிரமும், ரூ.2 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினால் ரூ.1600ம், ரூ.ஆயிரத்திற்கு வாங்கினால் ரூ.800ம் செலுத்தி பொதுமக்கள் ஆடைகளை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்