₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்
9/30/2022 6:53:06 AM
திருவள்ளூர், செப். 30: மப்பேடு காலனி, அழிஞ்சிவாக்கம் பகுதியில் தரம்உயர்த்தப்ப்டட மாதிரி அங்கன்வாடி மையங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு காலனி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களை தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி ₹12.58 இலட்சம் மூலமாக புனரமைத்து மாதிரி அங்கன்வாடி மையங்களாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் தலைமை வகித்தார். தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஷேர் மோனன், முத்துசாமி, மப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மார்ட் டிவி, வெளிப்புற விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களாக புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பிறகு மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்து தோட்டத்தில் மர கன்றுகள் நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, இவ்வங்கன்வாடி மைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடி மையங்களின் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி கற்று தர ஸ்மார்ட் டிவி, வெளிபுற விளையாட்டு மைதானத்தில விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மையத்திற்கு தேவையான சமையல் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மையத்திற்கு சுற்று சுவற்றில் ஐஇசி தகவல்கள் வரையப்பட்டுள்ளது, ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மப்பேடு காலனி மையத்தில் 1 - 6 வயதுள்ள 133 குழந்தைகளும், 2 - 5 வயதுள்ள 35 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயனடைந்து வருகின்றனர். மேலும், 7 கர்ப்பிணிகளும், 12 பாலூட்டும் தாய்மார்களும் பயனடைந்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மார்ட் டிவி, வெளிப்புற விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களாக புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
மேலும் செய்திகள்
இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க இலக்கு
திருமழிசை ஒத்தாண்டேஸ்வேரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது
ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பு பாஜ அரசை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருமணம் செய்வதாக சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
பணம் கேட்டு தொழிலாளியை வெட்டிய பிரபல ரவுடி சிக்கினார்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!