15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிப்பு சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள், புதிய நிர்வாகிகள்
9/30/2022 6:52:11 AM
சேலம், செப்.30: சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தில் கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையிலான 15வது பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் புதிதாக தேர்வு பெற்ற நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் வௌியிட்டுள்ளார். அதன்படி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவராக சுபாசு, துணைச்செயலாளர்களாக குமரவேல், திருநாவுகரசு, எஸ்.மஞ்சுளா, பொருளாளராக வக்கீல் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ராஜேந்திரன், கே.டி.மணி, குசீவெ.தாமரைக்கண்ணன், ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நாசர்கான் (எ) அமான், பூபதி, ராஜேந்திரன், அசோகன், குபேந்திரன், குப்புசாமி, எஸ்.ஆர்.அண்ணாமலை, சத்யா நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர்களாக ஓமலூர் வடக்கு பாலசுப்பிரமணி, ஓமலூர் தெற்கு செல்வகுமார், ஓமலூர் கிழக்கு ரமேஷ், சேலம் வடக்கு நடராஜன், தாரமங்கலம் கிழக்கு ராஜ அய்யப்பன், காடையாம்பட்டி கிழக்கு அறிவழகன், காடையாம்பட்டி மேற்கு ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரூர் செயலாளர்களாக கருப்பூர் லோகநாதன், கன்னங்குறிச்சி தமிழரசன், ஓமலூர் ரவிச்சந்திரன்,
காடையாம்பட்டி பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர செயலாளராக ரகுபதி, அவைத்தலைவராக முருகன், துணைச் செயலாளர்களாக கணேசன், தினகரன், கோமதிபரமசிவம், பொருளாளராக மஹபூப்ஷெரீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுதி செயலாளர்களாக சூரமங்கலம் தமிழரசன், மெய்யனூர் பன்னீர்செல்வம், அழகாபுரம் ஜெயக்குமார், அஸ்தம்பட்டி ராமச்சந்திரன், குமாரசாமிப்பட்டி சாந்தமூர்த்தி, செவ்வாய்ப்பேட்டை பிரகாஷ், அரிசிப்பாளையம் மனமேடு மோகன், அம்மாப்பேட்டை தனசேகரன், கிச்சிப்பாளையம் ஜெய், குகை ஜெகதீஷ், தாதகாப்பட்டி ஏ.எஸ்.சரவணன், பொன்னம்மாபேட்டை ராஜா, கொண்டலாம்பட்டி முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக தங்கமுத்து, துணைச்செயலாளராக சம்பத்குமார், சுந்தரம், எலிசபத்ராணி, பொருளாளராக பொன்னுசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முருகேசன், ராமநாதன், பூவா, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக அன்பழகன், காசிவிஸ்வநாதன், ரவிக்குமரன், சௌந்திரராசன், பழனியப்பன், தங்கமணி நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர்களாக சங்ககிரி ராஜேஷ், மேச்சேரி சீனிவாசபெருமாள், கொளத்தூர் மிதுன்சக்கரவர்த்தி, நங்கவள்ளி அர்த்தனாரிஈஸ்வரன், இடைப்பாடி நல்லதம்பி, கொங்கணாபுரம் பரமசிவம், மகுடஞ்சாவடி பச்சமுத்து, தாரமங்கலம் மேற்கு பாலகிருஷ்ணன், நகர செயலாளர்களாக மேட்டூர் காசிவிஸ்வநாதன், இடைப்பாடி பாட்ஷா, இடங்கணசாலை செல்வம், தாரமங்கலம் குப்பு என்ற குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரூர் செயலாளர்களாக மேச்சேரி சரவணன், கொளத்தூர் நடராஜன், பி.என்.பட்டி குமார், வீரக்கல்புதூர் முருகன், வனவாசி சுகுமார், நங்கவள்ளி வெங்கடாசலம், ஜலகண்டாபுரம் தமிழ்த்தென்றல், பூலாம்பட்டி பழனிசாமி, கொங்கணாபுரம் அர்த்தனாரிஈஸ்வரன், தேவூர் முருகன், அரசிராமணி காவேரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக கருணாநிதி, துணைச்செயலாளர்களாக பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, கோமதி, பொருளாளராக ராம், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக கணேஷ், சங்கர் (எ) சாமிநாதன், மனோகரன், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ஷேக்மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், வீரபாண்டி டாக்டர் மலர்விழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய செயலாளர்களாக கெங்கவல்லி சித்தார்த்தன், ஆத்தூர் செழியன், ஏற்காடு ராஜேந்திரன், வீரபாண்டி வெண்ணிலாசேகர், சேலம் தெற்கு மாணிக்கம், பனமரத்துப்பட்டி உமாசங்கர், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ரத்தினவேல், அயோத்தியாப்பட்டணம் தெற்கு விஜயகுமார், பெத்தநாயக்கன்பாளையம் சிவராமன் (வடக்கு), சத்தியமூர்த்தி (மத்தியம்), மருதமுத்து (தெற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவாசல் ஒன்றிய செயலாளர்களாக பாலமுருகன் (வடக்கு), பழனிசாமி (மத்தியம்), அழகுவேல்(தெற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நகர கழக செயலாளர்களாக ஆத்தூர் பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரூர் செயலாளர்களாக தம்மம்பட்டி ராஜா, செந்தாரப்பட்டி முருகேசன், தெடாவூர் வேல், கெங்கவல்லி பாலமுருகன், வீரகனூர் சரவணன், கீரிப்பட்டி காங்கமுத்து, பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், ஏத்தாப்பூர் பாபு என்ற வெங்கடேஸ்வரன், வாழப்பாடி செல்வம், பேளூர் சுப்ரமணியன், அயோத்தியாப்பட்டணம் பாபு என்ற செல்வராஜ், ஆட்டையாம்பட்டி முருகபிரகாஷ்,இளம்பிள்ளை சண்முகம், பனமரத்துப்பட்டி ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் ஜவுளி பூங்காவில் 55 ஆயிரம் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு: இன்னும் 2 ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும்
டூவீலரில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தம்
சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் ரூ.880 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அறிவிப்பால் உற்பத்தியாளர், நெசவாளர்கள் மகிழ்ச்சி
சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் ₹880 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அறிவிப்பால் உற்பத்தியாளர், நெசவாளர்கள் மகிழ்ச்சி
டூவீலரில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தம்
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!