SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சிளங்குழந்தை திடீர் சாவு

9/30/2022 6:48:10 AM

தர்மபுரி செப்.30: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. வாகனங்களை சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், செக்கரப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 3 மணி அளவில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், நாடித்துடிப்பு இல்லாததால் குழந்தை உயிரிழந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த உறவினர்கள், நேற்று மாலை 5 மணியளவில் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்