பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
9/30/2022 6:39:38 AM
பவானி, செப். 30: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பவானி வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா பவானியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.பி.துரைராஜ் (பவானி தெற்கு), பவானி கே.ஏ.சேகர் (பவானி வடக்கு), பவானி நகராட்சி துணை தலைவர் சி.மணி, திமுக மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், அவை தலைவர் மாணிக்கராஜ், திமுக நகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜனனி, பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் பங்கேற்ற 150 கர்ப்பிணிகளுக்கு தட்டு, வளையல், புடவை, மஞ்சள், குங்குமத்துடன் 5 வகையான உணவு வழங்கப்பட்டது. மேலும் நகராட்சி பொறியாளர் கதிர்வேல், நகராட்சி கவுன்சிலர்கள் மா.சுப்பிரமணியம், மோகன்ராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், விஜய் ஆனந்த், கோகிலாம்பாள், பாரதிராஜா, கவிதா உதயசூரியன், முன்னாள் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் அங்கம்மாள், ருக்மணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் வி.சக்திவேல், வட்டார திட்ட உதவியாளர் சரண்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது
சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!