திமுக மாவட்ட செயலாளராக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக தேர்வு
9/30/2022 1:34:25 AM
சிவகங்கை, செப்.30: ஐந்தாவது முறையாக மீண்டும் சிவகங்கை மாவட்ட செயலாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக உட்கட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கட்சியின் கிளை அமைப்புகளில் இருந்து ஒன்றியம், பேரூர், நகரம் வாரியாக ஏற்கனவே நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட அவைத்தலைவராக கணேசன், மாவட்ட துணை செயலாளர்களாக சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, பொருளாளராக துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் தென்னவன், ராமையா, முத்துத்துரை, முகமது, பொதுக்குழு உறுப்பினர்களாக உதயக்குமார், மதார்சிக்கந்தர், ஜெயமூர்த்தி, பிடிஆர்.முத்து, சோமசுந்தரம், சிங்காரம், அம்பலமுத்து, அசோகன், பெருமாள், ராஜாங்கம், கண்ணாத்தாள், தெய்வானை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தேசிய சிலம்பாட்டம் சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கை மாணவர்கள்
மார்ச் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு
நெற்குப்பையில் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
காரைக்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
கிராமசபை கூட்டங்களில் மீண்டும் சீமைக்கருவேல மரம் ஒழிப்பு தீர்மானம் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!