பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரணடைந்தனர்
9/30/2022 1:30:13 AM
திண்டுக்கல், செப். 30:திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் கடந்த செப்.24ம் தேதி பாஜக பிரமுகர் செந்தில்பால்ராஜ்க்கு சொந்தமான குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 5 டூவீல்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர். இதில் வாகனங்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ஹபீப் ரகுமான் (27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகியோர் நேற்று திண்டுக்கல் நீதிமன்றம் ஜேஎம்- 3ல் சரணடைந்தனர். நீதிபதி ரங்கராஜ் 3 பேரையும் 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கல்
புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’
பெரியாறு பாசன வாய்காலில் இருந்து புதிய கால்வாய் வெட்ட வேண்டும்: நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திண்டுக்கல் ஞானகணபதி ேகாயில் கும்பாபிஷேகம்
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!