திருவிடைமருதுார் அருகே போதேந்திர சரஸ்வதி சுவாமி மகோற்சவம்
9/29/2022 5:52:37 AM
திருவிடைமருதுார், செப். 29: திருவிடைமருதுார் அருகே கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தில் 330வது ஆண்டு ஆராதனை மகோத்சவம் 14 நாட்கள் நடந்தது. காஞ்சி காமகோடி மடத்தின் 59வது பீடாதிபதியாக பரிபாலனம் செய்த ஜகத்குரு பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் கோவிந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாளயபட்ச பவுர்ணமி தொடங்கி ஆராதனை மகோத்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. அந்த வகையில் 330வது ஆண்டு ஆராதனை மகோத்சவம்14 நாட்கள் நடந்தது. முதல் நாள் ஆக்யா பூஜை, திதி ஆராதனை, வீதி பஜனையுடன் குருநாதாளின் புறப்பாடு நடந்தது. 2வது நாள் முதல் 14 நாட்கள் தினமும் காலை 5.30 மணிக்கு தொடங்கி ப்ரபோதன பூஜை, மத் ராமாயணம், மூல பாராயணம், உஞ்சவ்ருத்தி, பாகவத பெரியோர்களால் சம்ப்ரதாய அஷ்டபதி பஜனை செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு பூஜை, தீபாராதனை, பாகவத ஆராதனை நடந்தது.
மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய 2 நேரங்களில் கிருஷ்ணபிரேமி சுவாமிகளால் மத் ராமாயணம் உபன்யாசம் நடந்தது. மேலும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்சவம் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் நிறைவாக 23ம் தேதி ஆஞ்சநேய உத்சவம், விடையாற்றி உத்சவம் நடந்தது. இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு