தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரம்
9/29/2022 5:52:01 AM
தஞ்சாவூர், செப். 29: தஞ்சாவூர் பெரிய கோயில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பு மிக்க ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் கோயில் வெளிப்புறங்களில் புகைப்படங்கள் எடுத்து செல்வது வழக்கம்.
அனைத்து பிரதோஷ காலங்களிலும் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் வெளிப்புற மதில் சுவர் பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது மதில் சுவர் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்,சிமெண்ட் பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி சுண்ணாம்புகல், வெல்லம், கடுக்காய் உள்ளிட்ட பொருட்கள் கலவையாக கொண்டு செங்கல் தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!