நெல்லை அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி இணையத்தில் பரப்பியவர் கைது
9/29/2022 5:36:11 AM
நெல்லை, செப்.29: சங்கரன்கோவில் அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி, சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மகன் கார்த்திக். அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார்(23), பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பு இவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் வைத்து பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளனர். பெட்ரோல் குண்டை அஜித்குமார் பற்ற வைக்க, அதை கார்த்திக் வீசி எறிந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.
ஒரு வருடம் கழித்து தற்போது இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் விஏஓ மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல் துணைப்பதிவாளர் தகவல்
குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்
அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது
களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!