SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

9/29/2022 5:20:18 AM

சிதம்பரம், செப். 29:   சிதம்பரம் அருகே புதுச்சேரி அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த சேதனபதி பூந்தோட்டம் மேலவீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (54). இவர் புதுவை மாநில அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி பகுதி வழியாக சென்னை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தின் முன் பக்கம் கல் வீசி தாக்கியதில் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓடினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவையில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி 6 அரசு, தனியார் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இந்நிலையில் சிதம்பரம் அருகே மர்ம நபர்கள் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்