சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணி நிறைவு
9/29/2022 5:19:54 AM
சிதம்பரம், செப். 29: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையான 6 பேர் கொண்ட குழுவினர், நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் 18 நாட்கள் நகை சரிபார்ப்பு ஆய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று 19வது நாளாக நகை சரிபார்ப்பு ஆய்வு பணி நடந்தது. இதுவரை 2005ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1955ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு மனு கொடுத்துள்ளதாகவும், அதன்படி மீண்டும் அடுத்த கட்ட நகை ஆய்வுப் பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
பழைய இரும்பு கடையில் 60 ஆயிரம் பணம் திருடியவர் அதிரடி கைது
கொலை செய்து புதைக்கப்பட்ட கல்லூரி மாணவனின் உடல் தோண்டி எடுப்பு
4 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
பட்டியலின மக்களின் உரிமைகளை தவிர மற்ற வழக்கில் தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டும் பணியை விரைந்து துவங்க வேண்டும்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி