சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
9/28/2022 5:44:40 AM
ஏரல், செப். 28: ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா, 26ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை தாமிரபரணி நதியில் இருந்து காளி அம்மன் கொடியுடன் ஏரல் நகர் வீதிகளிலும், சிறுத்தொண்டநல்லூர் வீதிகளிலும் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு கோயில் வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்வான தசரா திருவிழா, அக்.5 மற்றும் 6ம் தேதி நடக்கிறது. 5ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லுர் ஊரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயில் வந்து சேருதல், 8 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, 9 மணிக்கு அம்மன் ஏரல் நகர் வீதி உலா வரும் நிகழ்ச்சி, 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்து சேருதல், தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு ஏரல் பஜார் வழியாக அம்மன் கடைத்தெருவில் உலா வருதல், பகல் 12 மணிக்கு ஏரல் சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மதியம் 2 மணிக்கு அம்மன் ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை அம்மனுக்கு நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஏரல் நகர் உலா புறப்பட்டு 7ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நகர் உலா வெளியே சென்ற அம்மன் சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈராச்சி பாசன கண்மாய் மண் மேடாக மாறியது
ஏப்.5ல் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பந்தல்கால் நடும் வைபவம்
சிப்காட் பூங்காவில் கம்பி வேலி திருடிய 4பேர் கைது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காயாமொழி மாயாண்டி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!