சேத்தியாத்தோப்பில் பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும்
9/28/2022 5:39:27 AM
சேத்தியாத்தோப்பு, செப். 28: சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே சென்னை மார்க்கம் செல்லும் பகுதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் நீண்ட நாட்களாக அவதியடைந்து வருகின்றனர். கனமழை மற்றும் வெயில் நேரங்களிலும் பொதுமக்களும், பயணிகளும் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் காலை நேரங்களில் அதிகளவு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும். மேலும் வாரச்சந்தை நாளிலும் எண்ணற்ற கிராம மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது அவர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க நிழற்குடை இல்லாததால் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றிவிட்டு வடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள விசாலமான நிழற்குடையை போன்று இப்பகுதியிலும் நிழற்குடையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!