SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

9/28/2022 5:34:51 AM

திருப்பூர், செப். 28: தமிழகத்தில்  30 லட்சத்திற்கும் மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குறவர்களை  பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு  சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் தலைமை தாங்கி  பேசினார். இதில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர்  சந்திரசேகரன், வீரநம்பி குறிஞ்சியர் பேரவை மாநில தலைவர் சிவக்குமார்,  குறிஞ்சியர் சமூக நீதி பேரவை மாநில பொதுச்செயலாளர் துரைசாமி பெருமாள்,  தேசிய குறிஞ்சியர் சமூக நீதி பேரவை மாநில நிறுவன தலைவர் ஜெகநாதன்,  கருஞ்சிறுத்தை கட்சி மாநில தலைவர் கேப்டன் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்