பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பிஎப்ஐ நிர்வாகி கைது மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி
9/28/2022 5:30:47 AM
கோவை, செப்.28: கோவையில் பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் ரோட்டில் உள்ள பாஜ அலுவலகம் மீது கடந்த 22ம் தேதி மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகி சதாம் உசேன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் மீது இரு பிரிவினர் இடையே பிளவை ஏற்படுத்துதல் (153 ஏ), ஆட்கள் குடியிருக்கும் பகுதியில் தீ வைத்து தாக்குதல் (436) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சதாம் உசேன் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி தேர்வு
மேட்டுப்பாளையத்தில் கடைகளுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் மாயம்
அக்டோபர் 2 மற்றும் 9ம் தேதிகளில் மது கடைகளை மூட உத்தரவு
நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவையில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!