வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை முடித்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு
9/28/2022 5:26:33 AM
ஈரோடு,செப்.28: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில், 100 சதவீதம் முடித்த 25 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஈரோடு கலெக்டர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை, விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பொருட்டு கடந்த 18ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர்,கோபி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் 100 சதவீதம் முடித்த 25 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, பாராட்டுச்சான்றிதழை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
லாட்டரி விற்பனை : 3 பேர் கைது
பெரிய கொடிவேரியில் திமுக சார்பில் இருதய மருத்துவ முகாம்
பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
9வது நாளாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!