திமுக ஆட்சி காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடிக்கு மேல் நிவாரணம்
9/28/2022 3:16:43 AM
குளித்தலை செப்டம்பர் 28: திமுக ஆட்சி காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குளித்தலை பொதுக்குழு கூட்டத்தில் பொன்குமார் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் கரூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். திருச்சி மண்டல பொருளாளர் ஜெய் செல்வம் அனைவரும் வரவேற்றார் மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, மாநில நிர்வாகிகள் அழகேசன் ஜெகதீசன் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் செயலாளர் செல்லாண்டி, பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் செல்லமுத்து, இணைச்செயலாளர் குமார், மகளிர் அணி தலைவி நித்தியா மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் ஆகியோரை நியமன செய்து அறிமுகம் படுத்தி தமிழக கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் பேசியதாவது, தமிழகத்தில் 1982 ம் ஆண்டு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் என தொடங்கப்பட்டது அதன் பிறகு 18 வாரியங்கள் அமைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார் அதன் பிறகு திருநங்கை மாற்றுத்திறனாளி நல வாரியம் தொடங்கப்பட்டது இந்தியாவிலுள்ள முதல்வர்களில் முன்னோடி முதல்வராக திகழ்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வருபவர் நமது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சிறப்பாக சிறந்த முதல்வராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் 33 லட்சம் பேர் இந்த கட்டுமான நல வாரியத்தில் இருந்தார்கள் தற்பொழுது 10 லட்சம் பேர் மட்டுமே இருந்து வருகிறார்கள் காரணம் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நலவாரியத்திற்கு என எந்தவித நலத்திட்டங்களையும் உதவிகளையும் உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகளின் நிறைவேற்றாமல் இருந்ததினால் பல்வேறு காரணங்கள் காட்டி உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர். ஆனால் தற்போது ஓராண்டில் திமுக ஆட்சி காலத்தில் வாரிய தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு ஏழரை லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளார்கள். 5 லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தில் பல்வேறு சலுகைக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் தற்பொழுது ரூ.420 கோடிக்கு மேல் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் கட்டுமான தொழிலாளர்கள் அவர்களுக்கு சொந்தமாக இடம் இருந்தால் ரூ 4 லட்சம் செலவில் புதிய வீடு கட்டி தரப்படும் அந்த சலுகைகளை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது மேலும் அத்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாக இருந்து வருகிறது மத்திய அரசு கொண்டு காவல்துறையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என பொறுப்பெற்ற முறையில் பேசி வருகிறார் பகல் கனவு பலிக்காது வடக்கே வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம். இது போன்ற செயல்களில் தொடர்ந்து அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் மோடி அவர்களே அண்ணாமலையை கட்டுப்படுத்துங்கள் இல்லையென்றால் தமிழக மக்கள் கட்டுப்படுத்துவார்கள் என எச்சரிக்கை விடுத்து பேசினார்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!