இளையோர் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
9/28/2022 3:12:53 AM
நாகப்பட்டினம், செப்.28: நாகப்பட்டினம் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என துணை இயக்குநர் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடி வரும் வேளையில் இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தின் லட்சியங்களையும், மதிப்புகளையும் நினைவுகூறவும், நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும், தேசியம், தேசபக்தி உள்ளிட்டவற்றை வெளிகொணரவும் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன்பட இந்த திருவிழா நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இளையோர் திருவிழாவில் நம் பாரம்பரியம் மற்றும் மரபின் மீது பெருமை கொள்வோம் என்ற மைய கருத்தை வலியுறுத்தி போட்டிகள் நடைபெறுகிறது.
இளம்எழுத்தாளர் போட்டி, கவிதை, இளம் கலைஞர் போட்டி, ஓவியம், கைபேசி புகைப்பட போட்டி, ஆங்கிலம் மற்றம் இந்தியில் பேச்சுப்போட்டி, கலை விழா போட்டிகள் ஆகியவை நடக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். ஒரு போட்டியில் ஒரு நபர் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தொலைபேசி எண் 04365 225576 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
நகர்மன்ற கூட்டத்தில் தகவல் தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்
அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்
தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது
சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!