திருவாரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
9/28/2022 2:53:50 AM
திருவாரூர்: செப்.28: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகப்படியாக நன்னிலத்தில் 111.8 மி.மீ பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் என்பது கடந்த 5 மாத காலமாக சுட்டெரித்து வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 90 டிகிரி முதல் 100 டிகிரி வரையில் வெயில் அடித்து வந்த நிலையில் இதேபோன்று திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 90 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் மற்றும் தொழிலாளர்கள் போன்றவர்கள் இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 25ந் தேதி நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் மன்னார்குடி பகுதியில் இடி, மின்னலுக்கு தந்தை மற்றும் மகன் பலியாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவும் அதே 2 மணி அளவில் துவங்கிய மழையானது 4 மணி வரையில் இடி மின்னலுடன் கனமழையாக பெய்தது.
இதன் காரணமாகவும் திருவாரூர் உட்பட மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் குளம் போல் தேங்கியது. மேலும் தற்போது கதிர்வந்த நிலையில் இருந்து வரும் முன்பட்ட குறுவை பயிர்கள் மற்றும் அறுவடை நடைபெற்று வரும் பருத்தி பயிர்களுக்கு இந்த மழையானது பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர். நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, திருவாரூர் 70.3, மன்னார்குடி 20.1, நன்னிலம் 111.8, குடவாசல் 31.4, வலங்கைமான் 19.6, நீடாமங்கலம் 20.4, பாண்டவையாறு தலைப்பு 23.8, முத்துப்பேட்டை 2.6 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 300 மி.மீ மழையும், சராசரியாக 33.33 மி.மீ மழையும் பதிவாகியது.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!