ஹவுரா- புதுச்சேரி ரயிலில் கஞ்சா எண்ணெய்யுடன் ஒரிசா மாநில வாலிபர் கைது
9/28/2022 2:48:52 AM
திருச்சி, செப்.28: திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று ஹவுரா- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் விழுப்புரம் ரயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்அசோகன் மற்றும் போலீசார் வினோத்குமார், சிவராமன், விஜய் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அந்த பையில் சுமார் 2 கிலோ 50 கிராம் கஞ்சாவும், 900 கிராம் எடை கொண்ட கஞ்சா எணணெய்யும் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், ஓரிசா மாநிலம் முகிர்வன் மாவட்டம் உமிர்தார் பகுதியை சேர்ந்த ரமேஷ்கிரி சிலிம்பாபிசி என்று தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா, மற்றும் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து கைதான வாலிபர் மற்றும் கஞ்சாவை நுண்ணறிவு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்தமஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!