SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகள் நீடித்த வேளாண் உத்திக்கு பயிர் சுழற்சி எனும் மாற்றுப்பயிர் பயன்பாட்டுக்கு மாறவேண்டும்: வேளாண்மை இணை இயக்குநர் அறிக்கை

9/28/2022 2:43:02 AM

காஞ்சிபுரம், செப். 28: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நீடித்த வேளாண் உத்திக்கு பயிர் சுழற்சி எனும் மாற்றுப்பயிர் பயன்பாட்டுக்கு மாறவேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பல பகுதிகளில் நீர் வசதி உடையவர்கள் கூட ஒரு பயிருக்கு அடுத்து அதே பயிரைத் தேர்வு செய்து நடும்போது மகசூல் குறைவும் பூச்சி நோய்களால் கடும் சேதமும் ஏற்படுவதை தெரிந்தே உள்ளார்கள். ஒரு பகுதியில் ஒரே பயிர் தொடர்ந்து சாகுபடி செய்வதால் உணவுச்சங்கிலி தொடர் பராமரிப்பதால் பல்வேறு பூச்சி நோய்களின் உற்பத்தி மையமாக அந்த வயல் உருமாறுகிறது.

மேலும், முதல் பயிருக்கு காட்டும் அக்கறையை அடுத்த பயிருக்கு காட்டிட இயலாத சூழல் வருவதும் மற்றும் ஒரு காரணம். பொதுவாக ஒரு தானியப்பயிருக்கு அடுத்து பயறு வகைப்பயிர் சாகுபடி அல்லது எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடி மூலம் நல்ல காசு பார்க்க வழி உள்ளது. மண்ணின் சத்துக்களை ஒரேயடியாக பயிர்கள் எடுக்காத சூழலில் நீடித்த வேளாண்மைக்கு வழி ஏற்படுகிறது. பயறு வகைப்பயிர்கள் வேர் முடிச்சுகள் மூலம் தழைச்சத்து சேர்ப்பவை என்பதை விட குறைந்த நீர்த்தேவையும் அதிக வருமானம் பெற உதவுகிறது. வளம் குறைந்த மண்ணில் தொடர்ந்து அதிக சத்து தேவைப்படும் பயிர்கள் சாகுபடியை தவிர்த்து பயிர் சுழற்சியில் ஒரு பசுந்தாள் உரப்பயிரை கூட விதைத்து 1 மாதம் கழித்து உழவு செய்யலாம்.

குறிப்பாக கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பை இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கொள்ளு, நரிப்பயறு முதலிய மிக குறைந்த நீரில் வளர உகந்த பயிர்களைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக களர் மண் அல்லது உவர் மண் பகுதிகளில் மிகவும் நெருக்கமாக தக்கைப்பூண்டு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் நாம் விதைத்து 1 மாத பயிரை மடக்கி உழவு செய்து மண்ணில் வளர உள்ள பலவித களைகளையும் பெருகாது தடுக்கலாம். பல பகுதிகளில் வேலை ஆள் கிடைக்கவில்லை என்று பயிர் சாகுபடியை விட்டுவிட்டு பெரும் களைவரும் பகுதியாக அப்படியே விட்டுவிடும் விவசாயிகள் அடுத்த பயிரில் பெரும் இழப்பை சந்திப்பதால், குறைந்த செலவு தரும் கோடை உழவு உத்திகள் கடைபிடித்து கட்டாயம் களைகள் பெருக்கும் வாய்ப்பை குறைப்பது அனைத்து விவசாயிகளின் கடமை.

பயிர் சாகுபடி இல்லை என்று எவரும் சுணங்கி இருக்காமல் தம் தோட்டத்துக்கு தேவையான மண்புழு உர உற்பத்தியை இன்றே மேற்கொள்ளலாம். 45 நாட்களில் அடுத்த பயிர்களை வராத சூழலை மண்புழு உரப்பயன்பாட்டில் முறையான பல பயிர் சாகுபடி உத்திகளால் மேற்கொள்ள முடியும். மேலும் விபரம் பெற அலைபேசி எண் 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்