காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மீண்டும் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம்
9/28/2022 2:42:18 AM
காஞ்சிபுரம், செப்.28: தினகரன் செய்தி எதிரொலியால், காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மீண்டும் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதால் மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் கடந்த செப்.24ம் தேதி காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைதொடர்ந்து, நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் சிவகாஞ்சி போலீசார் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பஸ் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த புறக்காவல் நிலையத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 2 போலீசார், காவல் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், போக்குவரத்து ரோந்து காவல் வாகனம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ் நிலையத்தில் ரோந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு பயணிகள் அச்சமின்றி சென்று வரலாம் என்றும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!