வளர்ச்சி பணிகளுக்கு உதவிட வரியினங்களை பொதுமக்கள் விரைந்து செலுத்த வேண்டும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
9/27/2022 5:25:19 AM
நெல்லை, செப்.27: நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சியின் மாமன்ற ஒப்புதலோடு கடந்த ஏப்ரல் 1ம் ேததி சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் அரசு சார்பு கட்டிடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. காலிமனைகளுக்கு ஏற்கனவே உள்ள வரியில் 100 சதவீதம் வரிசீராய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்துவோர் உடனடியாக வரிகளை செலுத்திட வேண்டும். இதுபோன்று குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றையும் செலுத்திட வேண்டும். மேலும் சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, கட்டிடங்களை சீல் வைத்தல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
காலி மனை உரிமையாளர்கள் தங்களுக்குரிய காலிமனை வரியினை செலுத்த தவறும் பட்சத்தில், காலிமனைகளை தற்காலிகமாக மாநகராட்சி உபயோகத்திற்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு உதவிடும் வகையில், அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவோர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வரிவசூல் மையங்களில் நேரடியாக சென்று செலுத்தலாம். மேலும் வீடுகளுக்கு வரிவசூல் செய்ய வரும் வரிவசூலிப்போரிடம், ‘‘ஆணையாளர், திருநெல்வேலி மாநகராட்சி’ என்ற பெயருக்கு உரிய வரித்தொகைக்கு காசோலையாக மட்டும் வழங்கி, அதற்கான ரசீது பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்
கிராமங்களில் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற சிவபத்மநாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்கு அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு
களக்காட்டில் ஜென்ட்ஸ் டெர்மினல் கடை திறப்பு விழா
கூட்டுறவு சங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!