போலீஸ் கொடி அணிவகுப்பு
9/27/2022 5:21:11 AM
கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்டத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அச்சமின்றி பணியாற்றிடவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய போலீஸ் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை டி.எஸ்.பி., தமிழரசி துவக்கி வைத்தார். போலீசார் பெங்களூர் சாலை வழியாக தாலுகா அலுவலகம் வரை சென்று பின்னர் மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தனர். இதில், டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்.ஐ.,க்கள் சிவசந்தர், நவுசாத், பார்த்தீபன், தாலுகா அமர்நாத், போக்குவரத்து எஸ்.ஐ., சீதாராமன் உள்பட 54 போலீசார் கலந்து கொண்டனர். இது குறித்து டி.எஸ்.பி., தமிழரசி கூறுகையில், பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்பதற்காக போலீஸ் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் தெரிவிக்கலாம் என்றார். இதே போல், காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர் ஆகிய பகுதிகளிலும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில், காவல்துறை சார்பில் சமூக நல்லிணக்க கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கிருஷ்ணகிரி டிசிஆர்பி டிஎஸ்பி சரவணன் தலைமையில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டஷேன் முன்பு துவங்கி நேதாஜிரோடு, மண்டிதொரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், ஓசூர் சாலை, எம்,ஜிரோடு வழியாக பேரணி நடைபெற்றது. பேரணியில் இன்ஸ்பெக்டர்கள் (ராயக்கோட்டை) சுப்பிரமணி, (அஞ்செட்டி) குமரன், தேன்கனிக்கோட்டை சம்பூர்ணம், எஸ்ஐக்கள் தினேஷ், கார்த்திக், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!