மாற்று இடம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
9/27/2022 5:15:05 AM
கடலூர், செப். 27: கடலூர் மாவட்டம் அகர சோழத்தரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் அகர சோழத்தரம் 2வது வார்டில் நல்லான் குளம் உள்ளது. இதன் தென்புற கரையில் தார் சாலையின் இருபுறமும் சுமார் 21 குடியிருப்புகள் அமைந்துள்ளது. நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். மேலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம்.
வீட்டு வரியும் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி எங்கள் குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எங்களுக்கு சோழத்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
மாதர் சங்க மாநில மாநாடு மாநகராட்சி மேயர் பங்கேற்பு
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை
மங்கலம்பேட்டையில் இரு மாவட்டங்கள் சந்திக்கும் பகுதியில் போலீசார் தீவிர சோதனை
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!