அரசு பள்ளி, கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு
9/27/2022 5:14:39 AM
குறிஞ்சிப்பாடி, செப். 27: உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நடுவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அரசு கட்டிடங்களில் ஒரே மாதிரியான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 1600 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை பார்வையிட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு கோயம்புத்தூரை சேர்ந்த நடுவர் அமித் கே சிங்கரோணி வருகை தந்தார். பூவானி குப்பம், அகரம், அம்பலவாணன் பேட்டை ஆகிய கிராமங்களில் அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கல்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டு, பணியின் தரத்தை ஆய்வு செய்தார். கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார். கோ.சத்திரம் பகுதியில் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார்.
பொறியாளர்கள் ரத்தினவேல், நவீன்குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
மாதர் சங்க மாநில மாநாடு மாநகராட்சி மேயர் பங்கேற்பு
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை
மங்கலம்பேட்டையில் இரு மாவட்டங்கள் சந்திக்கும் பகுதியில் போலீசார் தீவிர சோதனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!