முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் கருத்தரங்கு அறிவிப்பு
9/27/2022 5:14:27 AM
கடலூர், செப். 27: கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு 6.10.2022 காலை 10மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. மேலும் முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் செய்திட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவுரையாற்றவுள்ளனர். எனவே தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன்னாள் படை
வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக இரு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கிடுமாறு மட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!