SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்ப பிரச்னையில் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகள் அதிரடி கைது

9/27/2022 5:14:20 AM


சேத்தியாத்தோப்பு, செப். 27: சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் குடும்ப பிரச்னையில் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மருமகள் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சிந்தாமணி (65). இவர் நேற்று முன் தினம் இரவு தனது இளையமகன் வேல்முருகன் வீட்டிற்குள் சென்று ப்ரிட்ஜில் பால் பாக்கெட்களை வைத்துவிட்டு வரும்போது வேல்முருகன் மனைவி சங்கீதா (31) சிந்தாமணியை வழிமறித்து இரண்டு கதவுகளை மூடிவிட்டு வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். சிந்தாமணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வேல்முருகனுக்கும், சங்கீதாவுக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. ஏற்கனவே கணவன் மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரச்னைக்கு சிந்தாமணி தான் காரணம் என எண்ணி சங்கீதா தீ வைத்துள்ளதாக தெரிகிறது. சங்கீதாவின் சொந்த ஊர் தட்டானோடை கிராமம் ஆகும். சங்கீதா தனது தாயார் பொற்கொடியிடம் செல்போனில் பேசி வருவது மாமியார் சிந்தாமணிக்கு பிடிக்கவில்லை எனவும், இதுபற்றி அவர் தனது மகனிடம் (சங்கீதாவின் கணவர்) வேல்முருகனிடம் தவறாக கூறி வந்ததால் ஒரு வருடமாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்து, தற்போது ஒரு மாத காலமாகத்தான் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் மாமியார்தான் என கருதிய சங்கீதா, மாமியார் சிந்தாமணி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி ரூபண்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வேல்முருகனின் சகோதரர் வீரமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சங்கீதாவை கைது செய்தனர். அவர் நேற்று கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் படுகாயமடைந்த சிந்தாமணிக்கு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குடும்ப பிரச்னையில் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி மருமகள் தீ வைத்த சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்