அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
9/27/2022 4:23:44 AM
ஈரோடு, செப். 27: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் மணிமாலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினார். இதில், அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழுதடைந்த செல்போன்களுக்கு பதிலாக புதிய செல்போன்கள் வாங்கி கொடுக்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
செய்முறை தேர்வுக்கு பேப்பர் பண்டல் கேட்ட விவகாரம் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தமிழ் பெருமிதத்தை உணர்த்த பண்பாட்டு பரப்புரை
கார் மோதி இன்ஜினியர் பலி
வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஈரோட்டில் நியோ ஐடி பார்க் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு
அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி