SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை முடித்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு

9/27/2022 4:23:19 AM

ஈரோடு,செப்.27: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில், 100 சதவீதம் முடித்த 25 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஈரோடு கலெக்டர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை, விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பொருட்டு கடந்த 18ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர்,கோபி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் 100 சதவீதம் முடித்த 25 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, பாராட்டுச்சான்றிதழை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்