ஈரோட்டில் ரூ.6.29 கோடியில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம்
9/27/2022 4:23:12 AM
ஈரோடு,செப்.27: ஈரோட்டில் பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கருங்கல்பாளையம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான கட்டுமான பணியினை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி முன்னிலையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த கட்டிடமானது, மூன்று தளங்களுடன், 1,538 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் குளிர்சாதனம் மற்றும் லிப்ட் வசதியுடன் கூடிய மின்னணு நூலகம், மாணவ-மாணவிகளின் உயர் கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி மையம், வேலைவாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுக்கான பயிற்சி, இளைஞர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம், தொழில் நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் போன்றவை அமைய உள்ளது.
தற்போது இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் இளைஞர் மேம்பாட்டுக்கான திறன் மேம்பாட்டுமையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில் பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், படித்து முடித்த இளைஞர்களுக்கு தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பயிற்சிகள், ஆலோசனை வழங்கப்பட உள்ளன. மேலும், மின்னணு நூலகம் அமைக்கப்பட உள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத்தேர்வுக்கு படிக்க வசதிகள் செய்யப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த பெரும் வாய்ப்பு கிடைக்கும். கட்டுமான பணிகள் வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
லாட்டரி விற்பனை : 3 பேர் கைது
பெரிய கொடிவேரியில் திமுக சார்பில் இருதய மருத்துவ முகாம்
பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
9வது நாளாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!