குடிபோதையில் தூங்கிய முதியவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி: போலீசார் விசாரணை
9/27/2022 3:33:18 AM
ஆவடி, செப்.27: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாரவிவர்மன்(50). இவர், ஆவடி பருத்திப்பட்டு அருகே கீரின் சிட்டி பகுதியில் தங்கியவாறு, அப்பகுதியில் நடைபெறும் தனியார் பள்ளி கட்டுமான பணியில் கடந்த மூன்று நாட்களாக கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்த பிறகு, இரண்டாவது தளத்தில் அமர்ந்து மது அருந்தினார். பின்னர், அங்கேயே படுத்து உறங்கினார். இந்நிலையில், அங்கு கைப்பிடி சுவர் இல்லாத காரணத்தினால், போதையில் இவர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை பணிக்கு வந்த சக தொழிலாளிகள் ராஜாரவிவர்மன் உயிரிழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் செய்திகள்
புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை
ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை
காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ₹1.75 கோடி பறிமுதல்:' ஹவாலா பணமா விசாரணை
₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!