காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ரத்ததான முகாம்
9/27/2022 3:29:03 AM
காஞ்சிபுரம், செப். 27: காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மையமும் இணைந்து நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் 2 நாட்கள் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் வந்திருந்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். பல்கலை கழக மாணவர்கள், ஊழியர்கள் என சுமார் 150 பேர் ரத்ததானம் செய்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலட்சுமி, சரவணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மைய மருத்துவர் சாய்நாதன் செய்திருந்தார்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!