ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
9/27/2022 2:49:49 AM
பழநி, செப்.27: ஒன்றிய அரசை கண்டித்து பழநியில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். பாலிசிகளுக்கு போனசை உயர்த்திக் கொடுக்க வேண்டும். பணிக்கொடை மற்றும் குழுக்காப்பீட்டை உயர்த்தி கொடுக்க வேண்டும். முகவர் தொழிலை முறையாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநியில் எல்ஐசி முகவர்கள் சங்க மதுரை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்ஐசி முகவர்கள் சங்க தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஆவுடைதங்கம், பொருளாளர் நடராஜன், அலுவலக ஊழியர் சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கல்
புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’
பெரியாறு பாசன வாய்காலில் இருந்து புதிய கால்வாய் வெட்ட வேண்டும்: நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திண்டுக்கல் ஞானகணபதி ேகாயில் கும்பாபிஷேகம்
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!