கமுதியில் இருந்து மதுரைக்கு கடத்திய 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை
9/27/2022 2:40:41 AM
மானாமதுரை, செப்.27: கமுதியில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்லப்பட்ட 50 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உள்பட இருவரிடம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டு அருகே உள்ள நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் ஒர்க்ஷாப்பில் நேற்று பகல் 12 மணியளவில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வாகனம் ஒன்று நிற்பதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மானாமதுரை போலீசார் உடனடியாக கீழமேல்குடி ரோட்டில் உள்ள அந்த ஒர்க்ஷாப்பிற்கு சென்ற போது சரக்குவேனில் 50 மூட்டைகள் பிளாஸ்டிக் சாக்கில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக டிரைவரிடம் விசாரித்த போது கமுதியை சேர்ந்த லிங்கம் என்பவர் மதுரைக்கு கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கமுதி அருகே வேளாங்குளத்தை சேர்ந்த தங்கவேல் மகன் விக்னேஷ்(23), வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் தனசேகரன் மகன் கார்த்திக்(38) ஆகிய இருவரையும் பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மருத்துவத்திற்கு பயன்படுத்த, மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்க வெற்றிலையை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும்: கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை
காளையார்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்
தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்
ஒன்றிய குழு கூட்டம்
திமுக மாவட்ட செயலாளராக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக தேர்வு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!