SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நாமக்கல்லில் புதிதாக அமைகிறது: 4 ஏக்கரில் ரூ5.69 கோடியில் வாரச்சந்தை வளாகம்

9/24/2022 5:55:06 AM

நாமக்கல், செப்.24: நாமக்கல்லில் ரூ5.69 கோடியில் வாரச்சந்தை வளாகம் அமைக்கப்படுகிறது. இங்கு வியாபாரிகளுக்கு 180 இடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாமக்கல்-பரமத்தி ரோட்டில் செயல்பட்ட தினசரி மார்க்கெட் கடந்த 8 ஆண்டுக்கு முன், திருச்செங்கோடு ேராட்டில் உள்ள வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், இங்கு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. மின்சார வசதி இல்லாததால், இரவில் சந்தையில் வியாபாரம் செய்ய முடியவில்லை.

இரவு மற்றும் அதிகாலையில் சந்தைக்கு காய்கறி ஏற்றி வரும் லாரிகளில் இருந்து, காய்கறிகளை இறக்க முடியவில்லை என வியாபாரிகள் கூறி வந்தனர். மேலும், சந்தைக்குள் சாலை வசதி இல்லாததால், மழைகாலங்களில் சந்தை வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும். இதனால் பொதுமக்கள் சந்தைக்கு வர சிரமப்பட்டனர். இந்த பிரச்னைகளை தீர்க்கக் கோரி, வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்திருந்த வியாபாரிகள், சந்தையை விட்டு வெளியேறி நகரின் பல இடங்களில் சாலையில் கடைகளை விரித்தனர். மேலும், பூங்கா சாலையிலும் கடைகள் போட்டனர்.

இதை ஆக்கிரமிப்பு கடைகள் எனக்கூறி நகராட்சி நிர்வாகம் அடிக்கடி அகற்றி வந்தது. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து, நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்வேறு அடிப்படை வசதிகள் மே்றகொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் நகராட்சியிலும் பல்வேறு பணிகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சந்தை வளாகம் ₹5.69 கோடியில் அமைக்கப்படுகிறது. தற்போது நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் தினசரி சந்தை, வாரச்சந்தை அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் சந்தை வளாகம் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் தினசரிசந்தை, வாரச்சந்தை, ஆட்டுச்சந்தை என மூன்றும் அமைகிறது. சந்தை வளாகத்தில் 180 கடைகள் அமைக்கப்படுகிறது. மேலும் ஒரு ரெஸ்டாரெண்ட், 3 இடங்களில் பொது கழிப்பிடங்கள் போன்றவை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வரும் ஏப்ரல் மாதம் முதல் சந்தை வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். தற்போதுள்ள தினசரி சந்தையில் 120 கடைகள் உள்ளன. அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. புதியதாக அமையும் சந்தை வளாகத்தில், வியாபாரிகளுக்கு தேவயைான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும், வாரச்சந்தை, ஆட்டுச்சந்தை இயங்கவும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்