இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
9/24/2022 5:52:40 AM
கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து பயிற்சி நிறுவன இயக்குநர் ஜெகன்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அணையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சியும், வங்கிக் கடனுக்கான ஆலோனைகளும் வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல், மென் பொம்மைகள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் பயிற்சி 13 நாட்கள், சிசிடிவி நிறுவுதல் மற்றும் பழுது பார்த்தல் 13 நாட்கள், மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் 10 நாட்கள், துரித உணவு தயாரித்தல் 10 நாட்கள், போட்டோஃகிராபி மற்றும் வீடியோ கிராபி 30 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள், பயிற்சி துவங்கும் நாளுக்கு முன்பு வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாதவர்கள் பயிற்சி துவங்கும் நாளில் நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர, 94422 47921 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் ஹாய் என்று டைப் செய்யலாம். அல்லது https://bit.ly/ REETRAININGKRISHNAGIRI என்ற இணையத்தில் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!